/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுடன் வெள்ளம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஆக 13, 2024 06:22 AM
வெண்ணந்துார்: ஏற்காடு மலையடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி, சேலம் நகரப்பகுதி, ஆட்டையாம்பட்டி, மதியம்-பட்டி, எலச்சிபாளையம், கொன்னையாறு வழியாக சென்று பர-மத்திவேலுார் பகுதி காவிரி ஆற்றில் கலைக்கிறது.
இதற்கிடையே, வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மதியம்-பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. கடந்த சில தினங்க-ளாக, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் கன மழை பெய்து வருகிறது. இதனால், திருமணிமுத்தாற்றில் வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள தரைப்பாலத்தை மூழ்க-டித்து செல்கிறது. இதனால், மதியம்பட்டி சுற்றியுள்ள கிராமங்க-ளுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாயக்கழிவு திறப்பு
அன்றாட பணிக்காக செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள், வயதா-னவர்கள், ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து செல்-கின்றனர். மேலும், தற்போது பெய்து வரும் மழையை பயன்ப-டுத்திக்கொண்டு, அப்பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவுநீரை திறந்து
விடுகின்றனர்.
இதனால், கருமை நிறத்தில், துர்நாற்றம் ஏற்பட்டு, நுரையுடன் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாய்ந்து செல்-கிறது. இதனால், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசு ஏற்-படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
எனவே, சாயக்கழிவுநீரை திறந்துவிடும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.