/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 11, 2024 06:44 AM
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி, தனியார் அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 717 விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்-பட்டு வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து, மோகனுார், ப.வேலுார், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
ஹிந்து முன்னணி சார்பில், நேற்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்-வலம் நடந்தது. குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தலைவர் அய்-யாவு தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்-திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் முன் தொடங்கி, மேட்டுத்தெரு, பஸ் ஸ்டாண்ட், பரமத்தி சாலை,
கோட்டை சாலை, கடைவீதி சாலை வழியாக சென்று மோகனுார் காவிரி ஆற்றை அடைந்தது. அங்கு ஆற்றில் ஒவ்வொரு சிலை-யாக கரைக்கப்பட்டன. பா.ஜ.,வினர், ஹிந்து முன்னணி நிர்வா-கிகள் கலந்து கொண்டனர்.

