ADDED : மார் 11, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை எஸ்.எஸ். காலனி ராஜிவ் காந்தி நகர் சவுந்தரபாண்டியன் மகன் முத்துப்பாண்டி 19, பலசரக்கு கடையில் வேலை பார்த்தார். நேற்று மாலை சித்தப்பா ரவிக்குமார், உறவினர்களுடன் மாடக்குளம் கண்மாய் முனியாண்டி புரம் பகுதியில் குளித்தார். கண்மாய் தண்ணீரில் மூழ்கி தவித்துக் கொண்டிருந்த
முத்துப்பாண்டியை பார்த்த ரவிக்குமார் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

