/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்... ஜல்... எனும் ஓடும் காளைகளுக்கு மணிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ADDED : ஜன 04, 2026 05:28 AM

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் மாடுகளை அலங்காரம் செய்வதற்காக தயாரிக்கப்படும் மணிகளை வெளியூர்காரர்கள் வாங்கிச் செல்வதால் வியாபாரம் களை கட்ட துவங்கியுள்ளது.
உழவுக்கும், உழைக்கும் காளைக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறும். இதில் பங்கேற்கும் காளையை அலங்காரப்படுத்துவதில் சலங்கை மணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கொட்டாம்பட்டி முருகன் தயாரித்து விற்கிறார்.
அவர் கூறியதாவது: மணி 9- முதல் 15 எண்ணிக்கையிலான மணிகள் ரூ.4000 முதல் ரூ. 5500, சில்வர் ரூ.2- ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம், வெண்கலம் ரூ.1,500 முதல் ரூ.-2 ஆயிரம் வரை விற்கிறேன். சலங்கையின் சத்தத்தை கேட்டு காளைகள் சோர்வின்றி ஓடும். குறைந்த விலையில் தரமாக செய்வதால் மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.