/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலை ஆய்வாளர்களின் சம்பள முரண்பாட்டை களைவது எப்போது; பத்தாண்டு பரிதவிப்புக்கு முடிவு வருமா
/
சாலை ஆய்வாளர்களின் சம்பள முரண்பாட்டை களைவது எப்போது; பத்தாண்டு பரிதவிப்புக்கு முடிவு வருமா
சாலை ஆய்வாளர்களின் சம்பள முரண்பாட்டை களைவது எப்போது; பத்தாண்டு பரிதவிப்புக்கு முடிவு வருமா
சாலை ஆய்வாளர்களின் சம்பள முரண்பாட்டை களைவது எப்போது; பத்தாண்டு பரிதவிப்புக்கு முடிவு வருமா
ADDED : அக் 09, 2024 06:11 AM
மதுரை : 'தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பல ஆண்டுகளாக இழப்பை ஏற்படுத்தும் சம்பள முரண்பாட்டை களைவது எப்போது' என சாலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் திறன்மேம்படுத்தப்பட்ட உதவியாளர்கள் (ஸ்கில்டு அசிஸ்டென்ட்) என்ற சாலை ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். ஐ.டி.ஐ., முடித்து நேரடியாக பணியில் சேர்ந்தவர்கள், பத்தாம் வகுப்பு முடித்து 5 ஆண்டுகளாக சாலைப் பணிகளில் ஈடுபட்டு, பதவி உயர்வு மூலம் பணியில் அமர்ந்தவர்கள் என இருதரப்பினராக இவர்கள் பணியாற்றுகின்றனர். சாலைகளை பராமரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது இவர்களின் பணி. இப்பணியாளர்களுக்கும், பொதுப்பணித்துறை, நகராட்சி, மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகளில் பணியாற்றும் இவர்களுக்கு நிகரான தகுதியுள்ள ஸ்கில்ட் அசிஸ்டென்ட் எனப்படும் ஊழியர்களுக்கும், 2010 முதல் சம்பள விகிதத்தில் ரூ.14 ஆயிரத்து 500 வரை வித்தியாசம் உள்ளது.
இதுகுறித்து சாலை ஆய்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சரவணகுமார், செல்வராஜன் கூறியதாவது:
அரசாணை 338 ன்படி ஸ்கில்ட் அசிஸ்டென்டுகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.9300, தரச்சம்பளம் ரூ.4200 இதர அலவன்சுகள் என மொத்தம் ரூ.34,800 சம்பளம் தரவேண்டும். இதனை மற்ற துறைகளில் வழங்கும்போது, நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் ரூ.20,200 ஆக வழங்குகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக முரண்பாடு உள்ளதால் அமைச்சர், தலைமைப் பொறியாளரிடம் மனுக்கள், போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
ஐ.டி.ஐ., முடித்த இந்த ஊழியர்கள் பத்தாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருந்தால் 'தேர்வு நிலை' (செலக் ஷன் கிரேட்) வரும்போது மேற்கண்ட சம்பளம் வழங்க வேண்டும் என்று ஆணை உள்ளது. இருந்தாலும் சம்பள முரண்பாட்டை களைய இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து பரிந்துரைக்க உள்ளதாகக் கூறி பேச்சு வார்த்தை நடத்தினர். அது கண்துடைப்பாகவே நடந்துள்ளது. இதற்காக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், முதல்வரை சந்தித்து மனு கொடுப்பது என ஆலோசித்து வருகிறோம் என்றனர்.

