/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுகாதார வளாகம் கட்டியாச்சு 'போர்வெல்'தான் என்னாச்சு
/
சுகாதார வளாகம் கட்டியாச்சு 'போர்வெல்'தான் என்னாச்சு
சுகாதார வளாகம் கட்டியாச்சு 'போர்வெல்'தான் என்னாச்சு
சுகாதார வளாகம் கட்டியாச்சு 'போர்வெல்'தான் என்னாச்சு
ADDED : டிச 26, 2025 06:10 AM

மேலுார்: கிடாரிப்பட்டி மேல தோப்பில் ஐநுாறுக்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். இங்கு 2023ல் ரூ.3.50 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதுவரை மின் சப்ளை, போர்வெல் அமைக்காத தால் பயன்பாட்டுக்கு வரமால் புதர் மண்டி, விஷப்பூச்சிகளின் வாழ் விடமாக மாறிவிட்டது.
இதனால் பொதுமக்கள் அழகர்கோவில் செல்லும் ரோட்டை கழிப்பிடமாக பயன்படுத்தினர். இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
மேலும் வளாகம் கட்டிய அதிகாரிகள் போர்வெல் அமைக்காதது, அவர்களின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு. எனவே மாவட்ட நிர்வாகம் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஊராட்சி செயலாளர் ரகுபாண்டி கூறுகையில், ''ஒன்றிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

