/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 04:25 AM
மதுரை: மதுரையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மாநில துணைத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.
நிர்வாகி ராஜூ வரவேற்றார். ஓய்வு பேராசிரியர் ராமராஜ், ஓய்வு தாசில்தார் கனகராஜ், ஓய்வு ரயில்வே பொறியாளர் பிரியாமலர்விழி பங்கேற்றனர்.
ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வைகை நதியை துார்வார வேண்டும். அமெரிக்க அரசின் இந்திய பொருள் மீதான 50 சதவீத வரிவிதிப்பை கண்டிப்பதுடன், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கைப்படி ஏற்றுமதி பொருட்களின் வரிவிதிப்பை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர் உட்பட விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் தளர்த்தியதற்கு நன்றி தெரிவிப்பது, மதுரை மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.