ADDED : செப் 17, 2025 03:35 AM

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை அனைத்து மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 9வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
'ஏ, பி, சி, டி' மண்டலங்களில் இருந்து வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரிகள் லீக் முறையில் பங்கேற்றன.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் பெற்று முத்தையா அம்பலம் நினைவுக் கோப்பையை 9வது முறையாக தக்க வைத்துக் கொண்டது. ஜி.டி.என்., கல்லுாரி 2வது இடம், அய்யநாடார் கல்லுாரி 3வது இடம் பெற்றன.
முதல்வர் பால் ஜெயகர், துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர்கள் நிர்மல்சிங், ரமேஷ் வாழ்த்தினர்.