/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனிச்சியத்தில் தேங்கும் கழிவுநீரால் அவதி
/
தனிச்சியத்தில் தேங்கும் கழிவுநீரால் அவதி
ADDED : நவ 28, 2025 07:46 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை அடைப்பவர்களால் சுகாதாரம் பாதிக்கிறது.
தனிச்சியம் மார்நாடு நகர் முதல் தெருவில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற 2024 மார்ச்சில் வடிகால் கட்டப்பட்டது.
இத்தெருவில் 90 சதவீதம் சிமென்ட் ரோடும், எஞ்சிய பகுதி மண் தரையாகவும் உள்ளது. வீடுகளின் கழிவுநீர் செல்ல முடியாதபடி சிலர் வடிகாலில் மண்ணைக் கொட்டி அடைத்துள்ளனர். கழிவுநீர் வடிகாலில் இருந்து வெளியேறி மண் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரம் பாதிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சத்யபிரியா கூறுகையில், ''எங்கள் தெருவில் வடிகால் அடைத்துள்ளதால் 20 மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. பி.டி.ஓ., ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துச் சென்ற உடனே, மீண்டும் வடிகாலை ஊராட்சி ஊழியர்களே அடைத்து விட்டனர். மழையின்போது ஒரு அடி உயரத்துக்கு கழிவுநீருடன் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. இதனால் காய்ச்சலால் பாதிப்படைகிறோம் என்றார்.

