
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: குலமங்கலத்தில் மதுரை கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் திருப்பரங்குன்றம் தீபத்திற்காக தீக்குளித்து தற்கொலை செய்த பூர்ண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்கு ஒன்றிய தலைவர் ஜோதிபாசு தலைமையில் பொதுச் செயலாளர் கிருஷ்ணன், துணைத் தலைவர் தங்கராஜ் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கிளை நிர்வாகிகள் தீபக் குமார்,சந்தான லட்சுமி, குட்டையன், ஜோதிமணி பங்கேற்றனர்.

