/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஸ்டேஷனில் சுற்றுலா தகவல் மையம் மூடலா
/
ரயில்வே ஸ்டேஷனில் சுற்றுலா தகவல் மையம் மூடலா
ADDED : செப் 14, 2025 04:11 AM

மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையை அடுத்துள்ள சுற்றுலா தகவல் மையம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது.
மதுரை வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்கள், அருகிலுள்ள மாவட்ட சுற்றுலா தலங்களை அறியும் வகையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன், மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் சுற்றுலா தகவல் மையம் உள்ளது. ஸ்டேஷன் மையம் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி கூறுகையில், ''முதல் நடைமேடையில் பராமரிப்புப் பணி நடப்பதால் தகவல் மையம் தற்காலிகமாக ஸ்டேஷன் மாஸ்டர் அறை அருகே மாற்றப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் மீண்டும் முன்பகுதிக்கு மாற்றப்படும்'' என்றார்.