ADDED : மே 07, 2025 01:56 AM
கோயில்
சித்திரை திருவிழா -9ம் நாள் திக்குவிஜயம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மரவர்ணச் சப்பரத்தில் மாசி வீதிகளில் உலா, கோயில் சிவகங்கை ராஜா மண்டபத்தில் எழுந்தருளல், காலை 8:00 மணி, திருக்கல்யாணத்திற்கு சீர் கொண்டு செல்லுதல், ஏற்பாடு: லாலா ஸ்ரீ ரெங்க சத்திரம், காலை 9:30 மணி, இந்திர விமானத்தில் நான்கு மாசி வீதிகளில் உலா, மாலை 5:00 மணி, ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்தில் திக்கு விஜயம், இரவு 7:00 மணி.
சித்திரை திருவிழா - 2ம் நாள்: தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயில், சோழவந்தான், அம்மனும், சுவாமியும் குதிரை வாகனத்தில் வீதி உலா, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் --- பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகர், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
கோடை கால சிறப்பு முகாம் -- சர்வதேச மொழி பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு: பாத்திமா கல்லுாரி மாணவியர், காலை 10:30 மணி.
தமிழ் வார நிறைவு விழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், சிறப்பு விருந்தினர்: மதுரை இலக்கியப் பேரவை நிறுவனர் சண்முக திருக்குமரன், ஏற்பாடு: தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம் சென்னை, காலை 10:00 மணி.
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் -- காகிதத்தில் பேசும் பொம்மைகள்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர்: அமல்ராஜ், காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
கோடைகால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி வகுப்புகள் -- கோயில் கலைக் கட்டடக் கலை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மியூசியத்துறை, காலை 10:00 மணி.
விளையாட்டு
2025--26 ம் ஆண்டு விடுதி மாணவர்கள் தேர்வுக்கான விளையாட்டுகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, தடகளம், கூடைப்பந்து,கால்பந்து, ஹாக்கி, கபடி, கிரிக்கெட், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.
கண்காட்சி
அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புதுறை, மாலை 4:00 மணி முதல் இரவு 11:00மணி வரை.
கல்விக் கண்காட்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
சமத்துவம் காண்போம் புகைப்படக் கண்காட்சி: அரசு மியூசியம், மதுரை, ஏற்பாடு: ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு, போலீஸ் துறை, சமத்துவ மையம், சென்னை சமூகப்பணிக் கல்லுாரி, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை.
