கோயில்
பங்குனி பெருந்திருவிழா - 8ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாரியம்மன் பூப்பல்லக்கில் புறப்பாடாகி வலம் வருதல், சிறப்பு அபிஷேகம், இரவு 10:00 மணி.
தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், அண்ணா நகர், மதுரை, சிறப்பு பூஜைகள், காலை 8:30 மணி , பிரசாதம் வழங்குதல், ஏற்பாடு: மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச் சங்கம், காலை 10:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
'ராமபிரானின் திருஅவதாரம்' ராமநவமி உற்ஸவம்: நிகழ்த்துபவர் -- உதவிப்பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழ வாசல், மதுரை, மாலை 6:30 மணி.
அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
நாம சங்கீர்த்தனம்: மூகாம்பிகை கோயில், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், மாலை 6:30 மணி.
பொது
மகளிர் ஆயம் சார்பில் மதுக்கடையை மூடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம், மதுரை, தலைமை: மாவட்ட அமைப்பாளர் இளமதி, காலை 10:00 மணி.
பஞ்சாங்கம் வெளியீட்டு விழா: 15, வள்ளலார் தெரு, ராமையா வீதி, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, தலைமை: கிளைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சங்கம், ஜெய்ஹிந்த்புரம் கிளை, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி 10வது ஆண்டு விழா: அரோபனா இந்தியன் பள்ளி, நேரு நகர், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, பங்கேற்பு: பள்ளி தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குநர் அபிலாஷ், காலை 11:00 மணி.
தியானம், யோகா
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் அடியார்கள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கண்காட்சி
'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

