ADDED : செப் 14, 2025 04:15 AM
கோயில் வெள்ளிக் கவசம் சூட்டும் விழா: ஆண்டாள் மாரியம்மன் கோயில், அவனியாபுரம், மதுரை, அம்மனுக்கு அபிஷேகம், கவசம் சூட்டி தீபாராதனை, காலை 9:00 மணி.
நவராத்திரி உற்ஸவம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, பாதுகை பூஜை, தீபாராதனை, காலை 8:00 மணி, ஆராதனை, காலை 10:30 மணி, தீர்த்த நாராயண பூஜை, தீபாராதனை, மதியம் 12:30 மணி, ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள் ஆராதனை, மாலை 6:00 மணி.
மாதாந்திர உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 9:30 மணி, கிருஷ்ண ஜெயந்தி விழா, மாலை 5:00 மணி, இம்மையில் நன்மைதருவார் கோயில், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
தேய்பிறை அஷ்டமி பூஜை, கால பைரவர் யாகம், மாலை 5:00 மணி, அபிேஷகம் மாலை 5:45 மணி, நவசக்தி விநாயகர் கோயில், டீன்ஸ் குடியிருப்பு, புது நத்தம் ரோடு, மதுரை.
பக்தி சொற்பொழிவு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: மாவட்ட எஸ்.பி., அரவிந்த், திரையிசை பாடல்கள் இலக்கியம் ஆகுமா ஆகாதா - பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் படம் திறப்பு: அம்மா கோயில், குன்னத்துார், திறந்து வைப்பவர்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பங்கேற்பு: பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், மாலை 5:00 மணி.
பாரம்பரிய நடை பயணம்: கைலாசநாதர் கோயில், நத்தம் ரோடு, என்.கோவில்பட்டி, கல்வெட்டுகள், கட்டடக் கலைகளை குறித்து விளக்குபவர்: தொல்லியல் நிபுணர் வேதாச்சலம், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் சேது, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, வயலக விவசாயிகள் மற்றும் இண் டேக், ட்ராவல்ஸ் கிளப், அரசு சுற்றுலாத்துறை, காலை 8:00 மணி.
இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 மணி.
கம்பன் கவியரங்கம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: பொற்கை பாண்டியன், ஏற்பாடு: பொற்கை பாண்டியன் கவிதா மண்டலம், இரவு 7:00 மணி.
கண்காட்சி விவேகானந்தா சேலைகள் பண்டிகை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
பொது தமிழக அரசின் 'திருக்குறள் திருப்பணிகள்' தொடர் வகுப்புகள்: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: வண்டியூர் தாகூர் வித்யாலயா பள்ளி தமிழாசிரியர் சிவசத்யா, ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி.