/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி டிச.13 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி டிச.13 க்குரியது
ADDED : டிச 13, 2025 06:20 AM
கோயில்
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தமிழ் வேதம்: நிகழ்த்துபவர் -- வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி, லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட கிளை, மாலை 6:30 மணி.
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கல்பனா, முன்னிலை: வரதராஜன், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் -- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 மணி.
பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பொது
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்கள் பங்கேற்கும் உண்ணாவிரதம்: மயில் மண்டபம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம்(இ.பி.சி.,) நடத்தும் ஏற்றுமதி மாநாடு 2025: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, முன்னிலை: சங்கத் தலைவர் ஜெகதீசன், இ.பி.சி., சேர்மன் ராஜமூர்த்தி, பங்கேற்பு: பிரிட்டனின் இந்திய பிரதிநிதி வெங்கடாசலம், மியான்மரின் இந்திய பிரதிநிதி ரங்கநாதன், காலை 9:00 மணி.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் எழுதிய 'கடந்த நேரமும் நடந்த துாரமும்' நுால் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை விருந்தினர்: உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், முன்னிலை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜெயச்சந்திரன், பங்கேற்பு: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கற்பகவிநாயகம், பிரபா ஸ்ரீதேவன், எழுத்தாளர் பொன்னீலன், ஏற்பாடு: நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
நெறிமுறைத் தலைமை குறித்த கருத்தரங்கம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் ராம்பிரசாத் மனோகர், பங்கேற்பு: முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, காலை 11:00 மணி முதல்.
மருத்துவம்
இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் எய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணா நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
இந்தியாவின் முதன்மையான பயணம், சுற்றுலா கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: பெங்களூருவின் இந்திய சர்வதேச பயணக் கண்காட்சி அமைப்பு, காலை 11:30 முதல் இரவு 7:00 மணி வரை.

