sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஐந்தாண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கும் காங்., மாவட்ட தலைவர்களுக்கு 'கல்தா'வா எம்.எல்.ஏ., வாய்ப்பு 'கை' விட்டு போகும் என கலக்கம்

/

 ஐந்தாண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கும் காங்., மாவட்ட தலைவர்களுக்கு 'கல்தா'வா எம்.எல்.ஏ., வாய்ப்பு 'கை' விட்டு போகும் என கலக்கம்

 ஐந்தாண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கும் காங்., மாவட்ட தலைவர்களுக்கு 'கல்தா'வா எம்.எல்.ஏ., வாய்ப்பு 'கை' விட்டு போகும் என கலக்கம்

 ஐந்தாண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கும் காங்., மாவட்ட தலைவர்களுக்கு 'கல்தா'வா எம்.எல்.ஏ., வாய்ப்பு 'கை' விட்டு போகும் என கலக்கம்


ADDED : டிச 16, 2025 07:47 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக காங்.,ல் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கும் மாவட்ட தலைவர்களை மாற்றி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து அகில இந்திய தலைமை ஆலோசிப்பதால், 'சிட்டிங்' தலைவர்கள் பலர் எம்.எல்.ஏ., வாய்ப்பு கைவிட்டு போய்விடுமே என கலக்கத்தில் உள்ளனர்.

பா.ஜ., வளர்ச்சியால் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்., அனைத்து மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், புதிய தலைவர்களை தேர்வு செய்யவும் அகில இந்திய அளவில் பொறுப்பாளர் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்த குழுக்களை தமிழக மூத்த தலைவர்கள் ஒருங்கிணைத்தனர்.

மாநிலத்தில் காங்கிரசின் 77 மாவட்டங்களில் கோவையில் 3 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டது போக மீதமுள்ள 74 மாவட்டங்களிலும் அகில இந்திய பொறுப்பாளர்கள் குழுக்கள் ஆய்வு செய்தன. ஒரு பொறுப்புக் குழு 2 மாவட்டங்கள் வீதம், வட்டத் தலைவர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அழைத்து, அவர்களிடம் மாவட்ட தலைவரின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்டது.

இதன் பின் புதிய மாவட்ட தலைவர்களுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெற்றன. அவர்களிடம் நேர்காணல் நடத்திய பொறுப்புக்குழு மாவட்டம் வாரியாக தலா 6 பேரை தேர்வு செய்து அகில இந்திய தலைமையிடம் 74 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்வு பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்றும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற முடிவிலும் அகில இந்திய தலைமை உள்ளது. இந்நிலையில் டில்லியில் தமிழக காங்., மூத்த தலைவர்கள் 15 பேருடன் அகில இந்திய தலைமை நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் மாவட்ட செயலாளர் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அகில இந்திய பொறுப்பாளர்கள் குழு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் 'சிட்டிங்' தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைவர்களின் விசுவாசிகளாக தான் 'சிட்டிங்' தலைவர்கள் செயல்படுகின்றனர். 90 சதவீதம் பேர் 5 ஆண்டுகளுக்கும் மேல் தலைவராக நீடிக்கின்றனர். கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பதவிக்கு வரவேண்டும் என மூத்த தலைவர் ராகுல் நினைக்கிறார். அந்த வகையில் மாற்றம் செய்ய அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளது.

தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது கட்சிக்கு சாதகமாக இருக்குமா, பாதகமாக இருக்குமா என்றும் தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கும் 'சிட்டிங்' தலைவர்கள் செயல்பாட்டை பொறுத்து அவர்களை மாற்றும் முடிவை தலைமை கையில் எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து எம்.எல்.ஏ., ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்த பலருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us