/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸில் 60 நாட்களில் ஆடுகளம் தயார்; மண் தரையில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும்
/
ரேஸ்கோர்ஸில் 60 நாட்களில் ஆடுகளம் தயார்; மண் தரையில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும்
ரேஸ்கோர்ஸில் 60 நாட்களில் ஆடுகளம் தயார்; மண் தரையில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும்
ரேஸ்கோர்ஸில் 60 நாட்களில் ஆடுகளம் தயார்; மண் தரையில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும்
ADDED : டிச 16, 2024 07:00 AM

மதுரை ; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்படும் செயற்கை தடகள டிராக் 60 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் டிராக், கேட் இடைப்பட்ட பகுதியில் பேவர் பிளாக் பதித்தால் டிராக்கின் ஆயுள் காலம் நீடிக்கும்.
இங்கு 2006 ல் அமைக்கப்பட்ட 400 மீட்டர் செயற்கை தடகள டிராக் காலாவதி ஆன நிலையில், 2023 மார்ச்சில் ரூ.8.24 கோடி மதிப்பீட்டில் புதிய டிராக், அதனுள்ளே கால்பந்து மைதானம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதி ஒதுக்கியது. ஓராண்டில் தடகளம், கால்பந்து இயற்கை புல்தரை அரங்கு அமைக்க அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது செயற்கை தடகள அரங்கில் ஏற்கனவே இருந்த ரப்பர் துகள்கள் அகற்றப்பட்டு முதல்கட்ட தார்பூச்சு முடிந்துள்ளது. இதற்கு மேல் நுண்ணிய ஜல்லிகற்களை தார் கலவையுடன் கொட்டி 2ம் கட்ட பூச்சு நடைபெறும். 20 நாட்கள் கழித்து 3 அடுக்குகளாக ரப்பர் துகள்கள் ஒட்டப்படும். இதற்கு 50 முதல் 60 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே நாட்களுக்குள் இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைப்பதற்கான உழவுப்பணியும் நிலத்தை சமப்படுத்தும் பணியும் முடிந்துள்ளது.
டிராக்கை பாதிக்கும் மண்தரை
வெளிநாட்டிலிருந்து இயற்கை புல்நாற்று கொண்டு வரப்பட்டு நடவுப்பணி துவங்கும்.
செயற்கை தடகள டிராக், கேட் இடைப்பட்ட பகுதியில் டிராக் அகலத்திற்கு மண் தரை உள்ளது. ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் வெளிப்புற வளாகத்தை விட டிராக் பகுதி பள்ளமாக உள்ளது. மழைநீர் வடிகால் வசதி இருந்தாலும் மழை பெய்யும் போது மண் அடித்து வரப்பட்டு டிராக்கில் தேங்கும். அதேபோல மாணவர்கள் மண் தரையை கடந்து டிராக்கில் பயிற்சி பெறும் போது தானாக டிராக்கில் மண் சேர்ந்து ரப்பர் துகள்கள் சீக்கிரத்தில் தேய்ந்து விடும்.
தற்போதும் டிராக், கேட் இடைப்பட்ட பகுதி மண் தரையாக விடப்பட்டால் மீண்டும் அதே நிலை ஏற்படலாம். எனவே இடையில் உள்ள மண் தரையை பேவர் பிளாக் தரையாக மாற்ற வேண்டும்.
அல்லது ஒரு வரிசையில் பேவர் பிளாக் கற்கள் பதித்து உயர்த்திய பின் செம்மண் தரை தடகள டிராக் ஆக மாற்றினால் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இயற்கை, செயற்கை டிராக்குகளில் பயிற்சி பெறமுடியும். செயற்கை டிராக்கும் சேதமடையாமல் பாதுகாக்க முடியும்.

