/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் பரிதவிப்பில் செம்பியனேந்தல் மக்கள்
/
வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் பரிதவிப்பில் செம்பியனேந்தல் மக்கள்
வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் பரிதவிப்பில் செம்பியனேந்தல் மக்கள்
வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் பரிதவிப்பில் செம்பியனேந்தல் மக்கள்
ADDED : அக் 15, 2024 05:33 AM

செம்பியனேந்தல்: புதுப்பட்டி ஊராட்சி செம்பியனேந்தல் பகுதியில் பாசனக் கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.
செம்பியனேந்தல் அரசுப் பள்ளி அருகே 35 வீடுகளில் மக்கள் வசித்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் புறம்போக்கு நிலம் என்று கூறி அதிகாரிகள் அவ்வீடுகளை இடித்துவிட்டனர். அதற்கு பதிலாக செம்பியனேந்தல் செல்லும் வழியில் அதிகாரிகள் மயானம் அருகே நிலம் ஒதுக்கினர். அதில் தற்காலிக வீடுகள் கட்டி வசிக்கின்றனர். கனமழை காரணமாக கள்ளந்திரி கால்வாயில் அதிகளவு நீர் செல்வதால் அவ்வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சோணைச்சாமி கூறியதாவது: சுந்தரராஜன்பட்டி சின்னக்கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. பள்ளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஊராட்சி தலைவர் இந்திரா தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கால்நடைகளுடன் சிரமப்படுகிறோம்.எங்களுக்கு ஒதுக்கிய இடம் அருகே மயானம் உள்ளது. வீடுமனைக்கு பட்டா கேட்டால் புறம்போக்கு நிலம் என்றுகூறி அதிகாரிகள் மறுக்கின்றனர், என்றார்.
முருகாயி கூறியதாவது: வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் குழந்தைகளுடன் ரோட்டில் தங்கியுள்ளோம். விஷ ஜந்துக்கள் அதிகம் வருவதால் 2 நாட்களாக துாக்கமில்லை. உதவவும் யாரும் இல்லை. இப்பகுதியில் 3 மாதமாக குடிநீரும் கிடைக்கவில்லை. புதுப்பட்டியில் ஒரு சென்ட் நிலம் கிடைத்தாலும் நிம்மதியாக இருப்போம் என வேதனை தெரிவித்தார்.

