ADDED : ஆக 30, 2025 04:24 AM

அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: துவரிமான் அருகே கீழமாத்துார் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆக.28ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவர், உற்ஸவருக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
