/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவரவர் செயல்களை சரிவர செய்வதே மிகச்சிறந்த வழிபாடு சுவாமி சிவயோகானந்தா பேச்சு
/
அவரவர் செயல்களை சரிவர செய்வதே மிகச்சிறந்த வழிபாடு சுவாமி சிவயோகானந்தா பேச்சு
அவரவர் செயல்களை சரிவர செய்வதே மிகச்சிறந்த வழிபாடு சுவாமி சிவயோகானந்தா பேச்சு
அவரவர் செயல்களை சரிவர செய்வதே மிகச்சிறந்த வழிபாடு சுவாமி சிவயோகானந்தா பேச்சு
ADDED : மார் 14, 2024 04:19 AM
மதுரை: ஒவ்வொரு மனிதரும் தத்தம் செயல்களை சரிவரச் செய்வதே மிகச் சிறந்த வழிபாடாகும் என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் பகவத்கீதை தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியது:
பகவத்கீதை 18 ம் அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் செயல் மூலமாக எவ்வாறு கடவுளை வழிபடலாம் என்பது குறித்து விளக்குகிறார். ஒவ்வொரு மனிதரும் தத்தம் செயல்களை சரிவரச் செய்வதே மிகச் சிறந்த வழிபாடாகும். பொருளால் செய்யும் வழிபாட்டினைக் காட்டிலும் துாய்மையான மனதால் செய்யப்படும் வழிபாடு கடவுளை மகிழ்விக்கின்றது.
மனிதர்களுடைய செயல்களில் உயர்வு, தாழ்வுகள் எதுமில்லை. எத் தொழில் புரிவோராயினும் உணர்வுப்பூர்வமாக, செய்தால் அது தெய்வத்தன்மை பொருந்தியதாகின்றது. அவ்வாறானவர்கள் உள்ளத்தை கடவுள் தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கி அமர்கின்றார்.
நெருப்பினை புகை சூழ்ந்திருப்பது போல் நாம் செய்யும் செயல்களில், செய்பவரிடத்தில் குறைகள் இருப்பதென்பது இயல்பாகும். அக்குறைபாடுகள் இடைவிடாது கடவுளை சிந்திப்பதாலும், சரணடைவதாலும் நீங்கிவிடும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இவ்வாறு பேசினார்.
இந்த சொற்பொழிவு மார்ச் 17 வரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தலைவர் டாக்டர் டி.ராம சுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் எஸ்.வெங்கடரமணி, நிர்வாகிகள் கே .ஸ்ரீ குமார், ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன், பரத்வாஜ், ஸ்ரீதரன் செய்திருந்தனர்.

