/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி; கணக்கு துவங்கி ஓராண்டாகியும் ஒரு பைசாவும் வரல என கவலை

ADDED : டிச 30, 2025 06:52 AM

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் 2024 ல் அனைத்து வகை மாணவர்களும் அஞ்சலகங்களில் செப்.,க்குள் வங்கிக் கணக்கு துவங்க கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களிலும் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் எண், போட்டோ சமர்ப்பித்து தொடக்க பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்குகளை துவங்கினர். இதற்காக அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் அஞ்சலகங்களே நேரில் வந்து மாணவர்களுக்கு கணக்கு துவங்கும் முகாம்கள் நடத்தின. இதன்படி மதுரை மாவட்டத்தில் தொடக்க கல்வியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் துவங்கப்பட்டன. கணக்கு, மாணவர் விவரம் 'எமிஸ்'லும் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆனால் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., என வழக்கமாக உதவித் தொகை பெறும் மாணவர்களை தவிர பிறருக்கு ஓராண்டாகியும் இதுவரை ஒரு பைசா உதவித் தொகை கூட வழங்கப்படவில்லை. இதே நிலை தான் பிளஸ் 2 வரை உள்ளது. பெற்றோர், மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. தொடக்க பள்ளிகளில் சில மாணவர்களுக்கு ஆதார் பதிவேற்றம் செய்வதில் பிரச்னை இருந்தது. அவர்களை தவிர அனைவருக்கும் கணக்கு துவங்கப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி., தவிர இதர பிரிவு மாணவர்களுக்கு ஏன், எதற்காக கணக்கு துவங்கப்பட்டது என தெரிவிக்கவில்லை.
ஆனால் சம்பந்தப்பட்ட மாணவரின் சேமிப்பு கணக்கை 'ஆக்டிவ்' ஆக வைக்க வேண்டும் என தொடர்ந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பணப்பரிவர்த்தனை இல்லாத நிலையில் மூன்று ஆண்டு வரை தான் கணக்கு 'ஆக்டிவ்' ஆக இருக்கும் என அஞ்சலகத்தில் தெரிவிக்கின்றனர். உதவித்தொகை எப்போது வரும் என கேட்கும் பெற்றோர், மாணவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்றனர்.