/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டம் ஒழுங்கு பிரச்னையை மறைக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்கிறார் ஸ்டாலின்: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

ADDED : ஜூலை 11, 2025 05:19 AM
அவனியாபுரம்: ''சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள்கள் நடமாட்டத்தை மறைக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்,'' என, மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சுங்கச்சாவடிக்கு தமிழக போக்குவரத்துக் கழகம் பாக்கி வைத்துள்ளது. அது மட்டுமா டீசல், பெட்ரோல் போடுவதிலும் ரூ.கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளார்கள். இதனால் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியம் கொடுத்து பாக்கி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டிய வேலை இது.
முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்கிறார். தமிழ்நாடு இங்கேதான் இருக்கிறது. அப்புறம் எதற்கு ஓரணியில் பயணம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. முதல்வரை பொறுத்தமட்டில் எப்போது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்ததோ அப்போதே அவருக்கு ஜுரம் வந்து விட்டது. கூடவே தோல்வி பயமும் வந்துவிட்டது. அந்த கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு சம்பவம் தினமும் நடக்கிறது. போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை.
பா.ஜ., வின் டம்மி வாய்ஸ்தான் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. பழனிசாமி பேச வேண்டிய கருத்தைத்தான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டம்மி வாய்ஸ் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.