ADDED : டிச 25, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தேசிய தர மதிப்பீட்டு குழு சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தனர். சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி கிருத்திகா வரவேற்றார். பேராசிரியர் ராதிகா அறிமுக உரையாற்றினார். சென்னை எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மொழி பண்பாடு தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ஹரி ஹரசுதன் பேசினார்.

