நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; தென்காசி சங்கரன்கோவிலில் கட்டப்பட்டுஉள்ள அமைதி கோபுர திறப்புவிழாவிற்கு சேவை தானம் செய்ய விரும்புவோர் அணுகலாம் என மதுரை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்தார்.
அவர் கூறியது:
மியோஹோஜி என்னும்புத்த சமய பிரிவால் தென்காசி சங்கரன்கோவில்வட்டம் வீரிருப்பில் 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச விழாவில் ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன், நேபாளத்தைச் சேர்ந்த புத்த பிட்சுகள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
2025 பிப்.20ம் தேதி சர்வமத வழிபாடு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. 21ம் தேதி காலை அமைதி கோபுர திறப்பு விழா நடக்க உள்ளது.
பல்வேறு வகையான பணிகளுக்கு சேவை செய்ய தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்றார். அலைபேசி: 98421 95056.

