/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் மீண்டும் கொள்முதல்
/
தினமலர் செய்தியால் மீண்டும் கொள்முதல்
ADDED : செப் 14, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் பாதியில் நிறுத்தப்பட்டதால் 15 நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூடைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் ஏற்பாட்டில் நெல் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.