ADDED : அக் 27, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மழைக்காலத்தில் கனமழை குறித்த தகவல், வானிலை முன்னெச்சரிக்கை, மழையளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறித்த விவரங்களை தமிழில் அறிந்து கொள்ள தமிழக அரசின் 'TN Alert' செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்த செயலியில் பருவநிலை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பேரிடர் காலத்தில் இயற்கை இடர்பாடு தொடர்பான புகார்களுக்கு மாநில கட்டுப்பாட்டு அறை 1070க்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 க்கும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0452 - 254 6161, வாட்ஸ்ஆப் புகார்களுக்கு 96550 66404ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

