/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி காற்சிலம்பை கையிலேந்தி ஆர்ப்பாட்டம்
/
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி காற்சிலம்பை கையிலேந்தி ஆர்ப்பாட்டம்
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி காற்சிலம்பை கையிலேந்தி ஆர்ப்பாட்டம்
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி காற்சிலம்பை கையிலேந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2025 06:49 AM

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று கறுப்பு சேலையில் வந்த திருப்பரங்குன்றம் பகுதி பெண்கள் பலர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காற்சிலம்பை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
பாம்பன்சுவாமி நகர் சுஜாதா ஹாசினி தலைமையில் பெண்கள் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர். வளாகத்தில் நின்று சிலம்பை ஏந்தியவாறு கோஷமிட்டனர். பின் சிலம்பை தரையில் வீசி எறிந்து உடைத்தனர்.
அவர்கள் கூறியதாவது: உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் அரசு தீபமேற்ற மறுக்கிறது. மலைமீது செல்ல ஒருவரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் நேற்று மற்றொரு தரப்பினரின் விழா தொடர்பாக மலையில் கொடியேற்ற அனுமதிக்கின்றனர்.
மதுரையில் பாண்டிய மன்னன் காலத்தில் பிழையான நீதி வழங்கியதால் கண்ணகி காற்சிலம்பை வீசியெறிந்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தது போல இன்றும் நாங்கள் நீதிகேட்டு வந்தோம்'' என்றனர்.
அவர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில், ''மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றுவது ஹிந்துக்களின் பலநுாறாண்டு பாரம்பரியம். இடையில் அன்னிய படையெடுப்பால் இடையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஏற்றுவது மோட்சதீபம் ஏற்றும் இடம்.
சந்தனக்கூடு விழாவுக்காக கொடியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மலைமீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இதில் பாரபட்சம் காட்டக் கூடாது. உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியுங்கள். இல்லையெனில் உண்ணாவிரதம் இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

