ADDED : நவ 20, 2024 05:40 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியத்தில் ரூ.4.52 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
வலையபட்டி, சேந்தமங்கலம், கோடாங்கிபட்டி,அழகாபுரி, வெள்ளையம்பட்டி, கல்லணை, மாணிக்கம்பட்டி, ராஜாக்கள்பட்டி, தேவசேரி, மேலச்சின்னணம்பட்டி, கீழச்சின்னணம்பட்டி, தண்டலையில் சமுதாயக்கூடம், நாடக மேடை, ரேஷன் கடைகள், பாலம், பஸ் ஸ்டாப், அங்கன்வாடி மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, தாசில்தார் ராமச்சந்திரன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, ஜெயராமன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் காயத்ரி, சின்னம்மாள், சுகந்தி கண்மணி, முத்துராமன்,ஜெயமாலா, பழனிச்சாமி, அழகு மணி, சேது சீனிவாசன், முருகையா, வீரலட்சுமி, துணைத் தலைவர் தர்மராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

