ADDED : பிப் 21, 2024 06:19 AM
அ நிறம் | அளவு
மதுரை,: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் குழந்தைகள், முதியோர்கள் நலப்பிரார்த்தனை நடந்தது. வள்ளலார் தெய்வீகம் தலைமையில் சன்மார்க்க சேவகர் ஜோதிராமநாதன் பிரார்த்தனையை நடத்தினார்.
மஹாமிருத்யஞ்சய கவசம், ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்ய லகரி, சுவாமிமலை முருகன் கவசம், திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம், பாம்பன் சுவாமி அருளிய சண்முக கவசம், வள்ளலார் அருளிய மருந்து பதிகங்கள் பாடப்பட்டன.
