ADDED : டிச 29, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: கடந்த அக்டோபரில் கோயம்புத்துார், திருச்சியில் இந்திய ராணுவம் நடத்திய அக்னி வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் பேரையூர் அக்னி சிகரம் அகாடமியில் பயிற்சி பெற்ற 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தேர்வானவர்களை தாசில்தார் செல்லப்பாண்டி, பேரூராட்சி தலைவர் காமாட்சி, எஸ்.ஐ சந்தோஷ் குமார் பாராட்டினர். தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க பேரையூர் தலைவர் கண்ணன் செய்திருந்தார்.

