/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயில் யாகசாலைக்குள் அனுமதியின்றி நுழைய சிலர் முயற்சி போலீசில் புகார்
/
திருப்பரங்குன்றம் கோயில் யாகசாலைக்குள் அனுமதியின்றி நுழைய சிலர் முயற்சி போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் கோயில் யாகசாலைக்குள் அனுமதியின்றி நுழைய சிலர் முயற்சி போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் கோயில் யாகசாலைக்குள் அனுமதியின்றி நுழைய சிலர் முயற்சி போலீசில் புகார்
ADDED : ஜூலை 12, 2025 04:21 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் யாகசாலைக்குள் அனுமதி இன்றி செல்ல முயன்றவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் யாக சாலை பூஜை துவங்கியது.
சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜைக்காக ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது அங்கு தமிழ் வேத பாடசாலை நிறுவனர் சத்தியபாமா தலைமையில் சிலர் தாங்களும் யாக பூஜையில் பங்கேற்போம் எனக்கூறி யாகசாலைக்குள் செல்ல முயன்றனர்.
அவர்களிடம் சிவாச்சாரியார்கள், பாடசாலையில் பூஜைகள் துவங்க உள்ளது யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவாச்சாரியார்களுக்கும், யாகசாலைக்குள் நுழைய முயன்ற பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த போலீசார் அப்பெண்களை அப்புறப்படுத்தினார்.
சிவாச்சாரியார்கள் கூறுகையில், 'யாக சாலையில் சுவாமிகளுக்கு தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி அலங்கரித்து சுவாமிகளின் விலை உயர்ந்த நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென சில பெண்கள் வந்து, நாங்களும் யாகசாலை பூஜை செய்வோம் என்றனர்.
அனுமதியின்றி திடீரென அவர்கள் யாகசாலைக்குள் நுழைய முயன்றதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது' என்றனர்.
இச்சம்பவம் குறித்து சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில், விதிமீறி அனுமதியின்றி யாகசாலைக்குள் நுழைய முயன்றதாக சத்தியபாமா உட்பட சிலர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியபாமாவும் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
அகில பாரத அனுமன் சேனா எதிர்ப்பு
ஹிந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா மதுரை மாவட்ட தலைவர் சக்திவேல், திருப்பரங்குன்றம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜை தொடங்க இருந்த தருவாயில், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஆறுமுகம், முருகன் ஆகியோர் அடையாளம் தெரியாத மூன்று பெண்களை அழைத்து வந்து யாகசாலை முன்பு ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சகர்களையும் அங்குள்ள பக்தர்களையும் பேசி யாகசாலையில் நுழைய முயற்சித்தார்கள். எங்களை மீறி எப்படி கும்பாபிஷேகம் நடத்துவீர்கள் என்று பார்ப்போம் என மிரட்டி சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், சிலர் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக தேவையற்ற சர்ச்சையை யாகசாலையில் ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

