/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மயான பாதை இல்லாமல் வரப்பை பயன்படுத்தும் மக்கள்
/
மயான பாதை இல்லாமல் வரப்பை பயன்படுத்தும் மக்கள்
ADDED : பிப் 08, 2024 04:52 AM

சோழவந்தான், : சோழவந்தான் அருகே மேலநாச்சிக்குளம், கரட்டுப்பட்டி, போடிநாயக்கன்பட்டியில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் கோட்டைமேடு, நரிமேடு பகுதியில் உள்ளது.
இந்த மயானத்திற்கு செல்ல பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி கரையோரமாக மயானத்திற்கு சென்று வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கிளைக் கால்வாய் மராமத்து பணியின் போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் அதனை அமைக்கவில்லை. இதனால் தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளிக்குள் செல்ல வேண்டியுள்ளது.
கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள்அக்கிராம மக்களின் வேதனை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு சிறுபாலம் அமைக்க உத்தரவு பெற்றும் பல ஆண்டுகளாக தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

