/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்கவுட் திட்ட மாணவருக்கு வெளிநாட்டு பணிவாய்ப்பு
/
ஸ்கவுட் திட்ட மாணவருக்கு வெளிநாட்டு பணிவாய்ப்பு
ADDED : செப் 13, 2025 04:34 AM
மதுரை: அரசின் நான் முதல்வன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து நடத்திய ஸ்காலர்ஸ் பார் அவுட் ஸ்டாண்டிங் அண்டர் கிராஜூவேட் டேலன்ட் இன் தமிழ்நாடு எனும் 'ஸ்கவுட்' திட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்கள், 14 மாணவியர்கள் பிரிட்டனின் துர்காம் பல்கலையில் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஒருவார காலம் நேரடி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான பயணம், தங்குமிடம், பயிற்சிக்கான செலவை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்றுக் கொண்டன.
இத்திட்டத்தில் மேலுார் தாலுகா தும்பைப்பட்டி அப்துல்லா பயிற்சி பெற்றார். அவர் கூறியதாவது: நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது ஸ்கவுட் திட்டத்தில் லண்டன் பல்கலையில் இந்த வாய்ப்பு கிடைத்தது. அங்கு பைதான், டேட்டா அனாலிடிக்ஸ், பிரிடிக்டிவ் மாடலிங் துறைகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்றேன்.
உலக நிபுணர்கள், வெளிநாட்டு மாணவர்களுடன் கிடைத்த அனுபவம் தன்னம்பிக்கை அளித்தது. இதனால் இன்று மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் புல் ஸ்டேக் டெவலப்பர் ஆக நியமனம் பெற்றுள்ளேன் என்றார்.