/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செவிலியர் நாங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிகிறோம் ஆர்ப்பாட்டத்தில் குமுறல்

ADDED : நவ 29, 2024 05:57 AM

மதுரை: ''செவிலியரான நாங்கள்கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிகிறோம்'' என, கிராம பகுதி செவிலியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் வேதனை தெரிவித்தனர்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன் கிராம பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவி சின்னாயிதலைமை வகித்தார். துணைத் தலைவர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். திரளான கிராம செவிலியர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது:கர்ப்பிணிகளுக்கு 16 ஸ்டேஜ்களில் மேற்கொள்ளும் சிகிச்சை குறித்து 'பிக் மீ' செயலியில் பதிவு செய்கிறோம். இவற்றில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய விவரத்தை புதிய செயலியிலும் அப்டேட் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக் கூடாது.
கர்ப்பிணிகளை நாங்கள் தினமும் சந்தித்து உணவு முறைகளை விசாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த வேலையை நாங்கள்இப்போது செய்யவில்லை. கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்கிறோம். கம்ப்யூட்டர் பணிகளுக்கு புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டும்.
செவ்வாய் தோறும் நடைபெறும் ஆய்வு கூட்ட நேரத்தை குறைக்கலாம். சமூக நல அலுவலர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம், என்றனர்.