/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டம் அறிவித்து வருஷம் 30!: தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் கண்டுகொள்ளவில்லை
/
நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டம் அறிவித்து வருஷம் 30!: தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் கண்டுகொள்ளவில்லை
நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டம் அறிவித்து வருஷம் 30!: தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் கண்டுகொள்ளவில்லை
நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டம் அறிவித்து வருஷம் 30!: தி.மு.க., - அ.தி.மு.க., அரசுகள் கண்டுகொள்ளவில்லை
UPDATED : ஜூலை 26, 2025 05:25 AM
ADDED : ஜூலை 26, 2025 04:38 AM

மதுரை: நீர்வளத்துறை சார்பில் மதுரை நிலையூர் - விருதுநகர் கம்பிக்குடி கால்வாய் விரிவாக்கத்திட்டத்தை அறிவித்து 30 ஆண்டுகளாகியும் அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகள் செயல்படுத்துவதாக கூறி காலம் தாழ்த்தி வருவதால் 5000 ஏக்கர் பாசனப்பரப்பிற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்திட்டத்திற்காக சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதி வைகையாற்றில் தனி தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து தண்ணீரை பிரித்து துவரிமான் வழி நிலையூர் கால்வாய்க்கு கொண்டு வரப்படுகிறது. மதுரை நிலையூரில் இருந்து விருதுநகர் கம்பிக்குடி வரையான 23 கி.மீ., நீள கால்வாயை விரிவுபடுத்துவது தான் திட்டத்தின் முதல் நிலை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கால்வாய் கட்டப்பட்டு தற்போது மதுரையின் 54 கண்மாய்கள் உட்பட சிவகங்கை, விருதுநகரில் உள்ள 5000 ஏக்கருக்கு பாசன தண்ணீர் கிடைக்கிறது. இரண்டாவது விரிவாக்க திட்டமாக கம்பிக்குடியில் இருந்து 20 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் அமைத்து 19 கண்மாய்கள் மூலம் 4960 ஏக்கர் பாசனம் பெற வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்து செயல்படுத்தவில்லை என்கிறார் காவிரி வைகை குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அர்ச்சுனன்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் திட்டத்தை நிறைவேற்றவில்லை. அடுத்து வந்த தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மதுரைக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை. நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டும் இன்னும் ஆரம்பகட்ட பணிகளை கூட துவங்கவில்லை. மூடிக்கிடக்கும் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் பல்கலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மதுரைக்கான திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்து ஆக.,11 ல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடக்கும் என்றார்.

