sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மைசூரு - துாத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம்

/

 மைசூரு - துாத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம்

 மைசூரு - துாத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம்

 மைசூரு - துாத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம்


ADDED : நவ 25, 2025 05:00 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மைசூரு - துாத்துக்குடி ரயில் நேற்று, 3 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தது.

நேற்றுமுன்தினம் மைசூரு - துாத்துக்குடி ரயில் (16236) ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 7:20 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. கடலுார் போர்ட்-மைசூரு இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால், துாத்துக்குடி ரயில் கிளம்ப தாமதமானதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

வரும் வழியில் பெங்களூரு -ஓசூர் பிரிவில் பெலந்துார் ரோடு - கார்மேலரம் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, பெங்களூரு கண்டோன்மன்டில் இருந்து புறப்பட்ட ரயில் கார்மேலரத்திற்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்தது.

இதனால் நேற்று 3:00 மணி நேரம் தாமதமாக காலை 10:25 மணிக்கு மதுரை வந்தது. 3:21 மணி நேரம் தாமதமாக மதியம் 1:36 மணிக்கு துாத்துக்குடி சென்றது.

இதனால் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்வோர் அந்தியோதயா, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி உள்ளிட்ட இணைப்பு ரயில்களை தவற விட்டு அவதிப்பட்டனர்.

மைசூரு - துாத்துக்குடி ரயில்அடிக்கடி தாமதமாக வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us