/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யாருடைய அழுத்தத்தையும் திருமாவளவன் ஏற்க மாட்டார் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
/
யாருடைய அழுத்தத்தையும் திருமாவளவன் ஏற்க மாட்டார் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
யாருடைய அழுத்தத்தையும் திருமாவளவன் ஏற்க மாட்டார் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
யாருடைய அழுத்தத்தையும் திருமாவளவன் ஏற்க மாட்டார் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
ADDED : டிச 17, 2024 04:07 AM
மதுரை: 'அம்பேத்கர் புத்தக வெளியீட்டுவிழாவில் பங்கேற்கக்கூடாது என திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் யாருடைய அழுத்தத்தையம் ஏற்க மாட்டார்'' என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெரும் மழை பெய்ததால் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தேன். இதுவரை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் இந்த நுாலகத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த நுாலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் பாலத்திற்கும் வித்தியாசம் உண்டு.
தண்ணீர் திறந்துவிடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் உள்ள பாலங்கள் அதிக தண்ணீர் வருவதால் சேதமடைகின்றன. சமீபத்தில் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராத விதமாக இதுபோன்று நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன.
2001 முதல் வி.சி.க., தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்திலும் திருமாவளவன் என்னுடன் சகோதர பாசத்துடன் பழகக்கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை. எனக்கும், தி.மு.க.,வுக்கும், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்று செயல்பட மாட்டார்.
தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை களை நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்து பராமரித்து வருகிறது. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு தேவைப்பட்டால் அதுகுறித்து 'நம்ம சாலை' என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம். அடுத்த 48 மணி நேரத்தில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

