/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நள்ளிரவிலும் செயல்படும் கல்குவாரிகளால் அபாயம்; கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
/
நள்ளிரவிலும் செயல்படும் கல்குவாரிகளால் அபாயம்; கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
நள்ளிரவிலும் செயல்படும் கல்குவாரிகளால் அபாயம்; கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
நள்ளிரவிலும் செயல்படும் கல்குவாரிகளால் அபாயம்; கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
ADDED : டிச 30, 2025 07:10 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் விதிகளை மீறி நள்ளிர விலும் இயங்கும் கல் குவாரிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.
இங்குள்ள வகுத்து மலையை ஒட்டிய வண்ணாத்தி கரட்டில் கல்குவாரிகள் செயல்படு கின்றன. இவை நள்ளிரவு, அதிகாலை 3:00 மணி என்று நேரம் காலம் இன்றி எந்நேரமும் இயங்கு கின்றன. இரவு, பகலாக இயங்குவதால் இது சட்ட விரோதம் மட்டுமின்றி, விபத்துக்கள், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நேற்று இரவு வெடிகள் வைத்து பாறைகளை உடைத்த பின், அதிகாலையில் 5 பொக்லைன்கள், மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மலையின் உச்சியில் இருந்து பாறைகளை உடைத்து தள்ளினர். இதனால் பனி மூட்டத்தை தாண்டி, துாசி பறந்து காற்று மாசு படுகிறது.
மலை உச்சி யில் இருந்து இரவில் அதிக லோடுடன் லாரிகள் இறங்கி ரிங் ரோட்டில் கிரஷர்கள் நோக்கி பறக்கின்றன. கல் குவாரிகள், கிரஷர்கள் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்ற விதி கிரஷர் துாசி போல காற்றில் பறக்கின்றன.
குவாரி சத்தத்தால் இப்பகுதி மலைக்கரட்டில் வசித்த விலங்குகள் மாயமாகி விட்டன. இங்கு அமையும் வாடிப்பட்டி -- தாமரைப்பட்டி 'அவுட் டர் ரிங் ரோட்டை' கடந்து ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு வனவிலங்குகள் செல்ல தமிழகத்தில் முதல் 'அனிமல் பாஸ்ஓவர்' (பாலம்) கட்டப்பட்டுள்ளது. ரோடு, பாலம் பணி முடிவடைவதற்குள் மலை மாயமாகி விடும் என அப்பகுதி விவ சாயிகள் தெரி விக்கின்றனர்.
ஸ்ரீகாந்த், விவசாயி, கொண்டையம்பட்டி: குவாரிகளுக்கென தனி வழித்தடமில்லை, நீர்வழியை சட்ட விரோதமாக பாதை போல பயன் படுத்துகின்றனர். தற்போது ரிங் ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதி மேய்ச்சல் புறம்போக்கில் குவாரி கழிவுகளை கொட்டியுள்ள தால் கால்நடைகளும், குவாரி துாசிகளால் தென்னை, வாழை சாகுபடியும் பாதித்துள்ளது. விபத்து நடந்த பின் அதிகாரிகள் குவாரி, குவாரியாக 'விசிட்' செய்யாமல் புகார் அளித்தால் நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கனிம வள, வருவாய், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றார்.

