ADDED : ஜூலை 17, 2025 12:35 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், வைரமுத்து அறக்கட்டளை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், உப தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மாணவி ஆரத்தி வரவேற்றார். உதவி பேராசிரியர் திருஞானசம்பந்தம் அறிமுக உரையாற்றினார். மேலச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் முருகேசன் பேசினார். மாணவிகள் நிகிலா, திவ்யபாரதி தொகுத்துரைத்தனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், மைய துறைத்தலைவர் காயத்ரிதேவி, பேராசிரியர்கள் தேவி பூமா, முனியசாமி ஒருங்கிணைத்தனர்.
