/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் பல்திறன் போட்டிகள்: லேடி டோக் கல்லுாரி சாம்பியன்

ADDED : நவ 28, 2025 07:50 AM

மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் கல்லுாரி மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் நடந்தன.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமை வகித்து பேசினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பாடல், நடனம், பிசினஸ் பிளான், கார்ப்பரேட் வாக் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
மாலை நடந்த நிறைவு விழாவில் டாட்காம் இன்போவே நிர்வாக இயக்குநர் வெங்கடேசன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை லேடி டோக் கல்லுாரி மாணவிகள் வென்றனர். அவர்களுக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், இணை இயக்குநர் புகழேந்தி, உதவி பேராசிரியர்கள் சேகர், கார்த்திக்பாபு, சிவஜோதி ரெயின்கார்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.