sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் நெல் சாகுபடி குறைவு; தாமத தண்ணீர் திறப்பே காரணம்

/

மதுரையில் நெல் சாகுபடி குறைவு; தாமத தண்ணீர் திறப்பே காரணம்

மதுரையில் நெல் சாகுபடி குறைவு; தாமத தண்ணீர் திறப்பே காரணம்

மதுரையில் நெல் சாகுபடி குறைவு; தாமத தண்ணீர் திறப்பே காரணம்


UPDATED : பிப் 03, 2024 06:41 AM

ADDED : பிப் 03, 2024 04:11 AM

Google News

UPDATED : பிப் 03, 2024 06:41 AM ADDED : பிப் 03, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் தாமதமான தண்ணீர் திறப்பால் சம்பா சாகுபடி பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது .

2023 - --24 ம் ஆண்டுக்கான அக்., முதல் டிசம்பர் வரையான சம்பா நெல் பருவத்திற்கு மதுரை மாவட்டத்திற்கு 43 ஆயிரத்து 580 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 28 ஆயிரத்து 412 எக்டேர் அளவே பயிரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 54 ஆயிரத்து 248 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி ஆனது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 ஆயிரத்து 836 எக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இந்தாண்டு இலக்குடன் ஒப்பிடும்போது 15 ஆயிரத்து 68 எக்டேர் பரப்பு குறைந்துள்ளது.

நெல்லுக்கு அடுத்தபடியாக கம்பு, சோளம் உள்ளிட்ட குறுந்தானியங்கள் 34 ஆயிரத்து 545 எக்டேர் இலக்கில் 32 ஆயிரத்து 588 எக்டேர் பரப்பளவில் சாகுபடியானது. பயறு வகைகளில் 11 ஆயிரம் எக்டேர் பரப்பளவுக்கு பதில் தற்போது 7192 எக்டேர் பரப்பளவில் சாகுபடி ஆகி உள்ளது. கரும்பு 2220 எக்டேர் இலக்கில் 1641 எக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தாமதமான தண்ணீர் திறப்பால் பல்வேறு பகுதிகளில் சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்துள்ளது.

கொட்டாம்பட்டியில் 2900, மேலுாரில் 5374 எக்டேர் பரப்பளவு குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் 4 குறுவைக்கும், செப்., 15 சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறப்பும் நடக்கும். கடந்தாண்டு 11 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடியான நிலையில் இந்தாண்டுக்கான தண்ணீர் ஜூனில் திறக்காததால் 8500 எக்டேர் சாகுபடி குறைந்தது. சம்பா பருவமான செப்.,15க்கு பதிலாக நவ.,10, 15ல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நிறைய விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை. இதனால் மதுரையின் இலக்கு பாதியாக குறைந்துள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: நெற்பயிர்கள் பெரும்பாலும் களிமண் தரையில் விளையும் என்பதால் மானாவாரி பயிர்களை இதில் பயிரிட முடியாது. அதற்கு வறட்சி, மழை இரண்டும் தேவைப்படும். தொடர் மழை தாங்காது. அதனால்தான் நெல்லுக்கு மாற்றாக பிற பயிர்களை நாங்கள் பயிரிட முடியவில்லை. தண்ணீர் இல்லாததால் எங்களால் நெல் சாகுபடியும் செய்ய முடியவில்லை என்றனர்.

தற்போது தொடர்ந்து விடப்படும் தண்ணீரால் மதுரை மாவட்டத்தில் கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையான கோடை பருவ சாகுபடி ஓரளவு கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us