/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குரு மூலம் தான் நாம் ஞானத்தை பெற முடியும்: வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேச்சு
/
குரு மூலம் தான் நாம் ஞானத்தை பெற முடியும்: வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேச்சு
குரு மூலம் தான் நாம் ஞானத்தை பெற முடியும்: வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேச்சு
குரு மூலம் தான் நாம் ஞானத்தை பெற முடியும்: வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேச்சு
ADDED : செப் 17, 2024 08:06 AM

மதுரை: குரு மூலம் தான் நாம் ஞானத்தை பெற முடியும் என்று வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், மதுரை ஆண்டாள் புரம் விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் வடகுடி சுந்தரராம தீட்சிதரின் ஸ்ரீ சங்கர சரித்ரம் தொடர் உபன்யாசம் நடைபெற்று வருகிறது . இன்று அவர் பேசியதாவது: காலடியில் சிவகுரு பரம்பரையில் சங்கர் கிடைக்கப் போகிறார் என்று பார்வதி சொன்னாள். இந்த உலகில் ஆதிசங்கரர் இல்லை என்றால் கிருஷ்ண ஜெயந்தி இல்லை. ராம நவமி போன்ற விசேஷங்கள் இல்லை.
கலியுகத்தில் ராம நாமா சொன்னால் மிகவும் புண்ணியம். நமக்கு நல்ல குருநாதர் இல்லை என்றால் மோட்சத்தை அடைய முடியாது. குரு மூலம் தான் நாம் ஞானத்தை, கடவுளை அடைய முடியும். ஸ்ரீ ஆதிசங்கரருக்கு முன்பும் பின்பும் குருநாதர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குழந்தை ஆனந்தா சாமி மிகவும் மகிமை உடையவர். சுக்கிரன் ராகு சனி போன்றவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நல்ல குருவை அடைந்தால் எல்லாம் கிடைக்கும்.
உலகத்தில் முதல் முதலில் குழந்தை பிறந்த உடன் அதற்கு காது மட்டும் கேட்கும் . வயதானவர்களுக்கு காது தான் முதலில் கேட்காமல்.போகிறது இந்த காது கேட்டு கேட்காமல் போவதற்குள் நம் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் கேட்க வேண்டும் என்று கர்ப்ப உபநிஷத் கூறுகிறது.
பாரத தேசத்தில் ராமாயணம் மகாபாரதம் 18 புராணங்கள் நமக்கு கிடைத்திருக்கிறது , அதை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் இந்த உலகில் நாம் யாரிடம் பிரியம் வைத்தாலும் நம்மீது ப அவர்கள் பிரியம் வைப்பதில்லை இதுதான் வாழ்க்கையின் சூட்சமம். மதுரை மீனாட்சியை விட உயர்வான தெய்வம் இல்லை.
துவாத சாந்தம் ஸ்தானம் மீனாட்சிக்கு மட்டுமே உண்டு. காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் ஒருமுறை மீனாட்சி சன்னதிக்கு வந்து ஒன்றரை மணி நேரம் கண்கொட்டாமல் பார்த்து அவருக்கு கண்ணீர் நீர் வழிந்து கொண்டே இருந்தது மீனாட்சி அருளின் சக்தியில் மூழ்கிப் போனேன் என்றார்.
குருவாயூர் சன்னதியில் பூஜா விதானத்தை எழுதிக் கொடுத்தவர் .ஆதி சங்கரர் திருப்பதியில் சீனிவாச பெருமாள் தளத்தில் தனாகர்ஷ எந்திரத்தை பதித்தவர் ஆதிசங்கரர். இயற்கையை நாம் ஆராதித்த வரையில் நாம் நன்றாக இருந்தோம் இயற்கையை அழிக்க ஆரம்பித்த பிறகு நாம் இன்றைக்கு அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.
முன்பு குழந்தைகள் பக்தியுடன் இருந்தார்கள். நம் வாழ்க்கையை நம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் முன்பெல்லாம் கவலைப்படாமல் இருந்தார்கள் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள்.இன்று அது மாறிவிட்டது. இறைவனை நம்பினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். இவ்வாறு வடகுடி சுந்தரராம தீட்சிதர் பேசினார்.
சொற்பொழிவு வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் விசுவாஸ் கருத்தரங்கு கூட்டத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

