ADDED : செப் 11, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் ஹிந்து ராஷ்டிரா சபா சார்பில் தசரா விழா கொண்டாட அனுமதி கேட்டு 10 நாட்களுக்கு முன் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லாததால், நேற்று கமிஷனர் லோகநாதனிடம் மாநில தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட தலைவர் மேகராஜ்பாண்டியன் மனு அளித்தனர்.
அதில், பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் அம்மன் சிலை அமைத்து செப்.,24 முதல் அக்.,2 வரை தினமும் பூஜைகள், வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மாநில செயலாளர் யசோதாமணி, நிர்வாகிகள் ராஜ்குமார், அருண்பாண்டியன் உடனிருந்தனர்.