sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு கட்டடம், திட்டங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்ட வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

/

அரசு கட்டடம், திட்டங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்ட வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு கட்டடம், திட்டங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்ட வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு கட்டடம், திட்டங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்ட வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : நவ 07, 2025 05:53 AM

Google News

ADDED : நவ 07, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக சட்டசபை கட்டடம், விருதுநகரில் உள்ளபுதிய கலெக்டர் அலுவலக கட்டடம், அரசு மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றுக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்ட தாக்கலான வழக்கில், தலைமை செயலாளர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநலமனு: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாகாணத்தை 'தமிழ்நாடு' என்ற பெயரால் அழைக்க வேண்டும் என 1952 ஜூலை 12ல் தொடங்கி 79 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்நீத்தார்.

அவர் இறந்த 5 ஆண்டுகளுக்கு பின், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியஅப்போதைய முதல்வர் அண்ணாதுரை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,விருதுநகரில் சங்கரலிங்கனாருக்கு நினைவு மண்டபம் கட்டினார்.

தியாகி சங்கரலிங்கனாரின் சிலை கூட எங்கும் நிறுவப்படவில்லை. அவரது பெயர் இதுவரை எதற்கும் சூட்டப்படவில்லை. அவரது நினைவாக கட்டப்பட்ட மண்டபமும் பராமரிப்பின்றி உள்ளது.

அவரை போற்றும் வகையில் தமிழக சட்டசபை கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, சட்டசபை வளாகத்தில் அவரது சிலையை நிறுவ வேண்டும். விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்திற்கும், அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி. குமரப்பன் அமர்வு விசாரித்தது. தமிழக தலைமை செயலாளர் ஒரு வாரத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us