/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் தகவல்
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் தகவல்
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூலை 30, 2025 12:18 AM
மதுரை கரூர் அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) 2020 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்ட சாயத்தொழிற்சாலை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்கின்றன. ஆலைகளின் கழிவுகள் குவிக்கப்படுகின்றன. கரூர் நகராட்சி கழிவுகளும் கலக்கின்றன. இதனால் அமராவதி அடுத்த கூவமாக மாறிவிடுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
அமராவதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை 2020 ல் தானாக முன்வந்து இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
கரூர் மாநகராட்சி தரப்பு: மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 34 வார்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மற்ற வார்டுகளில் செயல்படுத்தப்படும். அமராவதியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அமராவதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத்தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

