/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காளவாசல் செங்கல் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி! வெயிலால் தொழில் சூடு பிடிப்பதால் உற்பத்தியாளருக்கும் தான்

ADDED : பிப் 05, 2024 12:30 AM

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக மழை காரணமாக செங்கல் தொழில் முடங்கியது
இதனால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இப்பகுதி காளவாசல்களில் தயாராகும் செங்கல்கள், சேம்பர் செங்கலுக்கு இணையான தரத்துடன் உள்ளதால் உள்ளூர் தேவை போக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
கடந்த மாதம் ரூ. 5 க்கு விற்ற ஒரு செங்கல் தற்போது ரூ.6.50 க்கு விற்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக வேலை பார்க்கின்றனர். ஆயிரம் கற்கள் உற்பத்தி செய்வதற்கு ரூ.ஆயிரம் கூலியும், சூளையிட்டு எரிக்க விறகு, கல் எடுப்பதற்கு ஆட்கள் என செலவினங்கள் அதிகரித்துள்ளதால் செங்கல் விலை குறைவு, தங்களை பாதித்துள்ளதாக சூளை உரிமையாளர்கள் கவலையில் இருந்தனர்.
தற்போது ரூ.6.50 க்கு விற்பனையாவதால் செங்கல் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
சில தினங்களாக வழக்கத்திற்கு மாறாக, வெயில் முன்னதாகவே சுட்டெரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி செங்கல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இதற்காக, விளைநிலங்களில் மண்ணை பதப்படுத்தி, அச்சுக்கள் மூலம், செங்கல் அறுத்து, அதை நேர்த்தியாக அடுக்கி, தீ மூட்டுகின்றனர். அடுக்கி வைத்த கற்களின் அடியிலும், மேற்பகுதியிலும் விறகுகளை பயன்படுத்தி தீ வைக்கின்றனர். ஒரு வாரத்திற்கு பின், அவற்றை பிரித்து விற்பனை செய்கின்றனர்.
தயாரிப்பாளர்கள் கூறுகையில்,
''மண்ணை பிசைந்து, அச்சில் அறுத்து, சூளையில் அடுக்கி தீ மூட்டி, மூன்று நாட்கள் வரை மழை பொழியாமல் இருந்தால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.
தற்போது, வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மழை வரும் வாய்ப்புகள் இல்லாததால், செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளோம்'' என்றனர்.