
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகமலை: நாகமலைப் புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியின் 36வது பட்டமளிப்பு விழா தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி வரவேற்றார். செயலாளர் மற்றும் தாளாளர் சுந்தர் துவக்கி வைத்தார். கல்விக்குழுத் தலைவர் ரத்தினவேலு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் பாண்டியன், இணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் தவமணி, துணை முதல்வர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி உட்பட நாடார் மஹாஜன சங்கம், கல்லுாரி செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இளங்கலை, முதுகலையைச் சேர்ந்த 558 மாணவர்கள், 303 மாணவிகள் என 861 பேர் பட்டம் பெற்றனர். வேதியியல் துறைத் தலைவர் ஜெயசுந்தரி, பேராசிரியர் சிவகாமசுந்தரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.