/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ்களில் 'கியூ.ஆர்.' கோடு மூலம் கட்டணம் செலுத்தலாம் ஆர்வமுடன் வசூலிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு

ADDED : மே 08, 2025 03:29 AM
மதுரை: மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 'கியூ.ஆர்.,' கோடு முறையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்க துவங்கியுள்ளனர். இதில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கினர்.
மதுரை கோட்ட அரசு பஸ்களில் டிக்கெட்களை வினியோகிக்கும் நடத்துனர்கள் இதுவரை சில்லரை பெற்று வழங்கினர். இதில் பல்வேறு புகார்கள் எழுவதோடு, பயணிகளுடன் அடிக்கடி வாக்குவாதம், மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இதற்கு தீர்வு காண கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 4332 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணியிடம் செல்லும் இடம் கேட்டு அதற்கான தொகையை பதிவு செய்து கியூ. ஆர்., கோடுடன் இயந்திரத்தை நடத்துனர் காட்டுவார். அதில் பயணி தனது அலைபேசியில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தியதும் டிக்கெட் 'பிரின்ட் அவுட்' ஆக வழங்கப்படும். டெபிட், கிரெடிட் கார்டு மூலமும் செலுத்தலாம்.
இம்முறையில் ஆர்வமுடன் வசூலித்த நடத்துனர் முத்துவேல், சரவணன், நாகேந்திரன், சிவகாசி மயில்ராஜ், குமுளி சுதாகர் ஆகியோரை பாராட்டி மேலாண் இயக்குனர் இளங்கோவன் பரிசு வழங்கினார்.