/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ்சுக்கு 'டோல்கேட்' மறுப்பு
/
அரசு பஸ்சுக்கு 'டோல்கேட்' மறுப்பு
ADDED : டிச 19, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்.: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று நாகர்கோவில் சென்ற அரசு பஸ் பயணிகளோடு திருமங்கலம் நோக்கி வந்தது. கப்பலுாரில் டோல்கேட்டை கடக்க முயன்ற போது, பாஸ்ட் ட்ராக்கில் பணம் இல்லாததால் ஸ்கேன் ஆகவில்லை.
டோல்கேட் ஊழியர்கள் பஸ் அனுமதி மறுத்தனர். இதனால் பஸ் டோல்கேட் அருகே நிறுத்தப்பட்டது. இத்தகவலை நாகர்கோவில் அரசு பஸ் அதிகாரிகளிடம் தெரிவித்ததும், சம்பந்தப்பட்ட பஸ்சின் பாஸ்ட் ட்ராக் கணக்கில் பணம் செலுத்தினர். இதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக பஸ் டோல்கேட்டில் இருந்து கிளம்பிச் சென்றது. இதனால் பயணிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

