
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : 58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து கடந்த டிச.
23 ல், திறந்து விடப்பட்ட தண்ணீர் வலது, இடது கால்வாய் வழியாக பிரிந்து செல்கிறது. வலது கால்வாய் மூலம் பூதிப்புரம், உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. இடதுபுறக் கால்வாய் வழியாக சங்கரன்பட்டி, மொண்டிக்குண்டு ஊருணிகள் நிரம்பியுள்ளன. பின்னர் உத்தப்பநாயக்கனுார் பாறைப்பட்டி, நல்லொச்சான்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. நேற்று மாலை நல்லொச்சான்பட்டி கண்மாய் நிரம்பி, கல்லுாத்து சின்னக்குளம், புதுக்குளம், பானாமூப்பன்பட்டி, ரெட்டியபட்டி, அய்யம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.

